TEMPLES FOR LONG AND HEALTHY LIFESTYLE-நீண்ட ஆயுள், ஆரோக்கியத்திற்கான திருத்தலங்கள்

healthy life kovil

TEMPLES FOR LONG AND HEALTHY LIFESTYLE-நீண்ட ஆயுள், ஆரோக்கியத்திற்கான திருத்தலங்கள்

PART-1 பகுதி -1

TIPS FOR LONG LIFE AND GOOD HEALTH TO FAMILY MEMBERS

ஆயுள் குறைவில்லாமல்  நீண்ட ஆயுளோடு வாழவைக்கும் தமிழ்நாட்டின் திருத்தலங்கள்

Tips for long life and good health to family members

ஆயுள் குறைவாக உள்ளவர்களை நீண்ட ஆயுளோடு வாழ வைப்பதற்கும் , மரணப்படுக்கையில் உள்ளவர்களை  காப்பாற்ற உதவும் விதமாக புராணங்கள் சொல்லும் திருத்தலங்கள் நம் தாய் தமிழ்நாட்டில் எங்கு உள்ளன என பார்க்க உள்ளோம்.

நமக்கு ஆபத்து காலத்தில் ஆபத்பாண்டவனாய் நம்மை காப்பாற்றுவது அந்த இறைவனே ஆகும். உங்களுக்கு வாழ்வில் எத்தகைய பிரச்சனையை சந்தித்தாலும் அதற்கான வழியும் அதன் கூடவே பிறக்கும் என நினைவில் கொள்ளுங்கள். அந்தவகையில் நமது ஆயுளுக்கும் வராமல் பார்த்துகொளவ்து மிகவும் அவசியம் ஆகும். இவற்றை உங்களுக்கு ஜாதகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் முன்பே அறிந்துகொள்ளலாம்.

இதனால் முன்எச்சரிக்கையோடு கவனமாக இருந்தால் விபத்தினை தவிர்க்கலாம். மேலும் உடல்நிலை பாதிப்பில் அக்கறை செலுத்தி கவனமாக இருக்கலாம்.

சில நேரங்களில் உங்கள்  அன்பிற்குரியவர்கள் உங்கள் கையை விட்டு போகப்போகிறார் என்றோ , மருத்துவர்கள் கெடுநேரம் ஒதுக்கியிருந்தாலோ உங்களுக்கான தேடல் என்பது மனதைரியமும் இறைவனின் கருணையே ஆகும். உங்கள் மனதை தேற்றி உங்கள் கவலையை இறைவனான ஈசன் எம்பெருமான் அவனிடத்தில் விடுங்கள். உங்களுக்காக அவன் அருள்பாலிப்பான்.

ஜாதகத்தில் பரிஹாரம் கூறினால் அவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள். ஆயுள் ஹோமம் செய்ய வசதி இருப்பின் அதனையும் தவறாமல் செய்யுங்கள். ஹோமம் செய்ய வசதி , நேரம் இல்லாதோர் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் ஆறு கோவிலில் ஏதேனும் ஒன்றாவுது தரிசித்து வேண்டி வாருங்கள். ஈசன் உங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்.

ஒருவர் விதி முடிவிற்கு வந்தாலும் அவற்றை மாற்றவும் , தள்ளிப்போடவும் சக்தி என்பது எம்பெருமான் தரிசனம் கண்டு ஆசி கிடைத்தாலே போதும். வாழ்ந்தாலும் நீண்ட ஆயுள் கிடைக்கும்இறந்தாலும் அவருக்கான மோட்சம் கிடைக்கும்.  அத்தகைய ஆயுள் குறைவில்லாமல்  நீண்ட ஆயுளோடு வாழவைக்கும் திருத்தலங்கள் எவை என பார்க்க போகிறோம்.

வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்றைய தலைப்பு ஆயுள் குறைவில்லாமல்  நீண்ட ஆயுளோடு வாழவைக்கும் ஏழு  திருத்தலங்கள் நம் தாய் திருநாடான தமிழ்நாட்டில் எங்கு உள்ளன என விரிவாக தனி தனி பதிவாக பார்க்க உள்ளோம். வாருங்கள் தலைப்பிற்கு செல்வோம். பதிவினை முழுமையாக படிக்கவும் .

கோவில் -1

திருக்கடையூர் கால சம்கார மூர்த்தி வீரட்டேஸ்வரர்THIRUKADAIYUR KAALA SAMHARA MOORTHI VIRATESHWARAR

தனது 16 வயது இளமை பருவத்தில் உயிர் பிரியும் என்று எழுதப்பட்ட தன் ஜாதகத்தில், எம தர்மனிடம் போராடி ஈசனின் அருளால்  மரணத்தை வென்ற மார்கண்டேயனுக்கு  நீடித்த ஆயுள் கிடைக்கப்பெற்ற ஊர் திருக்கடையூர். இங்கே  எம்பெருமான் கால சம்கார வீரட்டேஸ்வரர் ஆக கோவில் கொண்டிருக்கிறார். 

இந்த திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில்  இருக்கின்றது. ரிஷிமுனிவர் ம்ரிக்கண்ட மற்றும் அவரது மனைவி மனஸ்வினி ஆகிய தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தவர் மார்க்கண்டேயன் ஆவார். கல்வி, அறிவு , அன்பு , கருணை என அனைத்திலும் சிறந்து விளங்கிய மார்க்கண்டேயன் ஆயுள் குறைபாடுடன் பிறந்தது அவரது தாய் மற்றும் தந்தைக்கு  மிகுந்த வருத்தத்தை அளித்தது.

தன் தாய் தந்தைக்கு சேவை ஆற்றுவதை தன் தலையாய் கடமையாக ஏற்ற மார்க்கண்டேயன் நீடித்த ஆயுள் கிடைக்க தன் தந்தையின் அறிவுரை படி ஈசனை நாடினர். அவரின் தீவிர பக்தனாக தன் இளம் வயதில் இருந்தே ஈசனுக்கு தொண்டாற்றினார்.

பதினாறு வயது நெருங்கியவுடன் மார்க்கண்டேயன் உயிரை பறிக்க வந்தார் எமதர்மன். தன் உயிரைப்பறிக்க வந்த எமதர்மனை மார்க்கண்டேயன் கண்டவுடனே இத்திருத்தலத்தில் உள்ள ஈசனின் திருவடியை   தஞ்சமடைந்தார்.

இருப்பினும் காலனான எமதர்மன்  தனது பாசக்கயிற்றை மார்கண்டேயனின் உயிரை பறிக்க வீச , அந்த பாசக்கயிறோ மார்கண் டேயனோடு சேர்த்து , சிவலிங்கம் மீதும் விழுந்தது. இதனால் தவம் களைந்து வெகுண்டெழுந்த ஈசன், எமதர்மனை  சம்ஹாரம் செய்தார்.

https://astrologyinformation7.com/கோவிலுக்குள்-செய்ய-கூடாத/

மேலும் மார்க்கண்டேயன் அன்பினால் உள்ளம் உருகி அவருக்கு தரிசனம் தந்து நீடித்த ஆயுள் மற்றும் ஆசியினை வழங்கினார் என்கிறது தல வரலாறு. உங்கள் ஜாதகத்தில் ஆயுள் குறைபாடு இருந்தாலோ, உங்கள் குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ இங்கு சென்று ஈசனை வழிபடுங்கள். நீடித்த ஆயுளினை எம்பெருமான் ஈசனிடம் பெறுங்கள்.

கோவில்-2

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில்

Chennai mylapore kapaleeswarar temple

அடுத்ததாக தமிழ்நாட்டின் தலைநகரமான  சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலை பற்றி பார்க்க உள்ளோம். முன்னர் ஒரு காலம் சிவநேசன் என்பவர் தனது மகள் பூம்பவுடன் இங்கே  வசித்து வந்தார். அப்பொழுது ஒருநாள் எதிர்பாராமல்   சிவநேசன் மகளான  பூம்பாவினை பாம்பு தீண்டியது. இதனால் தலைக்கு விஷமேறிய பூம்பா அங்கேயே இறந்து போனாள்.

இறந்து போன தனது மகளின் அஸ்தியான சாம்பல் , எலும்பு ஆகியவற்றை எடுத்து வைத்திருந்தார் சிவநேசன். ஒரு முறை திருஞானசம்பந்தர் கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்ததை அறிந்து  அவரை சந்திக்க சிவநேசன் சென்றார். உடன் தனது மகளின் சாம்பல் மற்றும் எலும்பையும் எடுத்து சென்றார்.

அவரை சந்தித்தவுடன் தனது மகள் வாழ வேண்டிய இளம்வயதிலேயே பாம்பின் விஷக்கடியால் இறந்துவிட்டதை சொல்லி தனது மனக்குமுறலை  திருஞானசம்பந்தரிடம் கூறினார்.

இதை கேட்டவுடன் திருஞானசம்பந்தர் சிவநேசன் மகளின் சாம்பலையும், எலும்பையும் உடனே ஆலயத்தில் வைத்து, திருப்பதிகம் பாடினார் .  திருப்பதிகத்தை கேட்டு மெய்யுருகி போன கபாலீஸ்வரர் மாண்ட பூம்பாவை உயிர் பெறச் செய்தார்.

இதை கண்ட சிவநேசன் மற்றும் பக்தர்களுக்கு  ஆச்சரியத்தில் மெய்சிலிர்த்தது. அதன்பின் தமிழகத்தில் கபாலீஸ்வரரின் புகழும்  விண்ணுயர்ந்தது. நாள்தோறும் பக்தர்களின் வருகையினால்  இன்று வரை நமக்கெல்லாம் அருள்பாலிக்கின்றார். எனவே சென்னைக்கு அருகாமையில் இருப்பவர்கள் ஆயுள் குறைபாடு ஏற்பட்டால் இங்கு சென்று உங்கள் ஜாதத்தை ஈசனிடத்தில் வைத்து வழிபட்டு  அவனை உங்கள் அன்பினால் கட்டிபோடுங்கள். நிச்சயம் ஆயுள் தோஷம் நீங்கி நீண்ட வாழ்வோடு வாழ்வீர்கள்.

மேலும் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் காணலாம்.……

நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம் 

சந்திக்கின்றோம். தகவலை உடனுக்குடன் பெற  astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

To share with your friends please follow the links…

Rating: 5 out of 5.

READ MORE…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply